விற்பனையில் புதிய மைல்கல் கடந்த ரெட்மி நோட் 7 சீரிஸ்

விற்பனையில் புதிய மைல்கல் கடந்த ரெட்மி நோட் 7 சீரிஸ்
ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஒபன் சேல் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இதேபோன்று ஒபன் சேல் குறுகிய காலக்கட்டத்திற்கு நடத்தப்பட்டது. புதிய ஒபன் சேல் அறிவிப்புடன் இந்தியாவில் ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 50 லட்சம் யூனிட்களை கடந்து இருப்பதாக சியோமி அறிவித்துள்ளது.
பிப்ரவரி மாதம் இந்தியாவில் அறிமுகமான ரெட்மி நோட் 7 சீரிஸ் ஐந்து மாதத்தில் 50 லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்திருக்கிறது. ரெட்மி நோட் 7 சீரிசில் ரெட்மி நோட் 7 ப்ரோ, ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஒபன் சேல் என்பதால் வாடிக்கையாளர்கள் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனினை ப்ளிப்கார்ட், Mi அதிகாரப்பூர்வ வலைத்தளம், Mi ஹோம் ஸ்டோர், Mi ஸ்டூடியோ மற்றும் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் எப்போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.
இந்தியாவில் ரெட்மி நோட் 7 ப்ரோ 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 13,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 15,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூன்று வேரியண்ட்களும் நெபுளா ரெட், நெப்டியூன் புளு மற்றும் ஸ்பேஸ் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இருமடங்கு டேட்டா பலன்கள் வழங்கப்படுகிறது. இதனை பெற வாடிக்கையாளர்கள் ரூ. 249 அல்லது ரூ. 349 சலுகையை ரீசார்ஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது முதல் பத்து மாதங்களுக்கு அதிகபட்சம் 1120 ஜி.பி. டேட்டா பெற முடியும்.
இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை வசதி, தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ஐந்து சதவிகித கேஷ்பேக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ரெட்மி நோட் 7 ப்ரோ
ரெட்மி நோட் 7 ப்ரோ சிறப்பம்சங்கள்:
– 6.3 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
– அட்ரினோ 612 GPU
– 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
– 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.79, சோனி IMX586, 6P லென்ஸ், PDAF, EIS
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 13 எம்.பி. செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார்
– ஸ்பிளாஷ் ப்ரூஃப்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்மார்ட் பி.ஏ. TAS2563
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யு.எஸ்.பி. டைப்-சி
– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– க்விக் சார்ஜ் 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
Copyright © 2019 - Techtheme.com All rights reserved.