அடேங்கப்பா… 6 வயதில் 55 கோடிக்கு வீடு வாங்கிய யூ-டியூப் சிறுமி…

அடேங்கப்பா… 6 வயதில் 55 கோடிக்கு வீடு வாங்கிய யூ-டியூப் சிறுமி…

6 வயது யூடியூப் நட்சத்திரம் போரம், சியோலில் சுமார் 55 கோடி மதிப்புள்ள ஐந்து மாடி சொத்தை வாங்கியுள்ளார்!!

தென் கொரியாவைச் சேர்ந்த ஆறு வயது யூடியூப் நட்சத்திரம் போரம், சியோலில் 9.5 பில்லியன் (8 மில்லியன் டாலர் அல்லது ரூ .55 கோடிக்கு மேல்) ஐந்து மாடி சொத்தை வாங்கியதாக CNN தெரிவித்துள்ளது.
தென்கொரியாவைச் சேர்ந்த போரம் என்ற 6 வயது சிறுமி போரம், இரண்டு யூ-டியூப் சேனல் வைத்துள்ளார். அதில், சந்தைக்கு புதிதாக வரும் பொம்மைகளை வைத்து விளையாடி அதை யூடியூப்பில் பதிவேற்றுவதையே பொழுது போக்காக வைத்துள்ளார்.

அதுமட்டும் இல்லாமல் தனது குடும்பத்தினருடனான அன்றாட நடவடிக்கைகளையும் வீடியோவில் பதிவு செய்து மற்றொரு யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார். யூடியூப்பில் இவருக்கு 3 கோடி ரசிகர்கள் இவரை பின்தொடர்கின்றனர். விளையாட்டுப் பொருள்கள் குறித்து ரிவியூ செய்யும் சேனலுக்கு 13.6 மில்லியன் பேரும், வீடியோ பதிவிடும் சேனலை 17.6 மில்லியன் பேரும் பின்தொடர்கின்றனர். போரத்திற்கு ஜலதோஷம் என்ற பெயர் கொண்ட இந்த வீடியோ மட்டும் யூடியூப்பில் 33 கோடி முறைக்கும் அதிகமாக பார்க்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பல வீடியோக்கள் மூலம் மாதம் தோறும் இந்திய மதிப்பில் 21 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார் இந்த 6 வயது சிறுமி. சியோலின் புறநகரான கங்னம் பகுதியில் இந்த சிறுமி வாங்கிய 5 மாடி வீட்டின் விலையைக் கேட்டால் நமக்கு தலை சுற்றும். 5 மாடி கொண்ட வீட்டை 55 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறாள் போரம். 2 ஆயிரத்து 770 சதுரஅடியில் உள்ள ஐந்து மாடி வீடு போரத்திற்காக அவளது பெற்றோர் தொடங்கிய நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்பாவின் பாக்கெட்டில் பணத்தைத் திருடுவது, கர்ப்பிணியாய் இருந்து பிரசவத்திற்கு செல்வது போல் நடிப்பது என சர்ச்சைக்குள்ளான வீடியோக்களையும் வெளியிட்டு கண்டனத்திற்கு உள்ளானபோதும் அதைப் பற்றி கவலைப்படாமல் தினமும் 70 ஆயிரம் ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருக்கிறாள் போரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
Copyright © 2019 - Techtheme.com All rights reserved.