இனி ரயில்களில் உணவு தயாராவதை லைவ் ஸ்ட்ரீமிங்-ல் பார்க்கலாம்!

ரயில்களில் எப்படி உணவு தயாராகிறது என்பதை இனி இணையத்தில் பயணிகள் நேரடியாக காண்பதற்கு புதிய முறையை அறிமுகம் செய்துள்ளார் ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல்!

ரயில் பயணிகளுக்கு பயனுள்ள வகையில் இந்தியன் ரயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் Menu on Rails, Rail MADAD என்ற புதிய இரண்டு மொபைல் செயலியை அறிமுகபடுத்தினார்.

இந்த செயலி மூலம் இரயில் பயணத்தின் போது பயணிகள் சந்திக்கும் இன்னல்கள் தொடர்பாக புகார்களை தெரிவிக்க இந்திய ரயில்வே துறை இந்த முறையை அறிமுகம் செய்துள்ளது. இதையடுத்து, ரயில்களில் வழங்கப்படும் உணவு பட்டியல்களை தெரிந்துகொள்ளவும் புதிய செயலியை அறிமுகம் செய்த்துவைத்தனர். ரயில்களில் தயார் செய்யப்படும் உணவுகள் தரமற்றதாகவும் சுத்தம் இல்லாமலும் சமைக்கபடுவதாக ரயில் பயணிகள் நெடுங்காலமாகவே புகார்களை தெரிவித்து வந்தனர். இந்த புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் புதிய முறையை அறிமுகம் செய்துள்ளார்.

இது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்….! 

ரயில்களில் உள்ள சமையல் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த அமைச்சகம் முடிவுசெய்துள்ளது. ரயில்வே உணவுத் துறைக்குச் சொந்தமாக 200 சமையலறைகள் உள்ளன. இதில், முதலில் 16 சமையலறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதன்படி, ரயில்களில் சமைக்கப்படும் உணவுகளைப் பயணிகள் நேரடியாகப் பார்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது, டெல்லி, மும்பை, ஜான்சி, புவனேஸ்வர் உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் ரயில்களில் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. உணவுகள் சமைக்கப்படுவதை, ஐ.ஆர்.டி.சி இணையதளத்தின் வாயிலாகப் பயணிகள் நேரடியாகப் பார்க்கலாம் என்றும் இதை விஷன் கம்ப்யூட்டிங் என்ற முறையில் செயல்படுத்த உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

சமைக்கப்படும் உணவுகளில் ஏதேனும் குறைபாடுகளைப் பயணிகள் கண்டால், உடனடியாக இது குறித்து புகார் தெரிவிக்கும் வசதியும் உள்ளது. மேலும், புகார்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு உடனே கொண்டு செல்லப்பட்டும். ஒப்பந்ததாரர் நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்தபடியாக ஐ.ஆர்.சி.டி.சி.,க்கு புகார் செல்லும் வசதி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »