இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

புகைப்படங்களை பகிரும் வசதியை தரும் இன்ஸ்டாகிராமில் சிறிய அளவிலான வீடியோ கோப்புக்களையும் பதிவேற்றம் செய்ய முடியும் என்பது அனைவரும் அறிந்ததே.

இவ் வசதியில் அதிரடி மாற்றம் ஒன்றினைக் கொண்டுவருவதற்கு இன்ஸ்டாகிராம் தீர்மானித்துள்ளது.

இதன்படி UHD 4K வீடியோ மற்றும் நீளமான வீடியோக்கள் என்பவற்றினை பதிவேற்றக்கூடிய வசதியினை தரவுள்ளது.

குறித்த வீடியோக்கள் அதிகபட்சம் 20 நிமிடங்கள் வரை நீளமானதாக இருக்க முடியும்.

இவ் வசதியானது ஜுன் மாதம் 20ம் திகதி அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த தகவலை TechCrunch தொழில்நுட்ப இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »