நாசாவின் கண்ணில் மண்ணைத்தூவி பூமியைத் தாக்கிய விண்கல்

கடந்த சனிக்கிழமை விண்கல் ஒன்று பூமியைத் தாக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.

2018 LA என பெயரிடப்பட்ட இவ் விண்கல் ஆனது 2 மீற்றர்கள் நீளமானதாகவும்.

இது நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் கண்காணிப்பில் ஆரம்பத்தில் தென்பட்டிருக்கவில்லை.

எனினும் பின்னர் அரிசோனாவில் உள்ள நாசாவின் Catalina Sky Survey நிலையத்தில் தென்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையிலேயே தென்னாபிரிக்காவில் விழுந்துள்ளது.

இதன்போது மின்னல் போன்ற பாரிய வெளிச்சம் தோன்றியுள்ளது.

இக் காட்சி பாதுகாப்பு கண்காணிப்புக் கமெராவில் பதிவாகியுள்ளது.

எவ்வாறெனினும் இதனால் பாரிய பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »