நொடிப் பொழுதில் எடுக்கப்பட்ட முடிவுகளால் மாறிய உலக சரித்திரங்கள்!

1. அமெரிக்க அதிபரின் உயிரைக் காப்பாற்றிய நீண்ட உரை

1912இல் அக்டோபர் 14 அன்று விஸ்கான்சினிலுள்ள (Wisconsin) ஒரு ஹோட்டலுக்கு வெளியே முன்னாள் அமெரிக்க அதிபர் தியோடோர் ரூஸ்வெல்ட் (Theodore Roosevelt) 50 பக்க உரை ஒன்றை இரண்டாக மடித்து தமது சட்டைப் பையில் வைத்திருந்தார்.

அருகிலிருக்கும் அரங்கில் உரையாற்ற அவர் சென்றுகொண்டிருந்தார்.

அங்கு கூட்டத்திலிருந்த ஒருவனால் திரு. ரூஸ்வெல்ட் சுடப்பட்டார்.

அதிர்ஷ்டவசமாக, சட்டைப் பையிலிருந்த 50 பக்க உரை துப்பாக்கி குண்டு அவரது நுரையீரலைத் துளைக்காமல் பாதுகாத்தது.

திரு. ரூஸ்வெல்ட் அன்று உரையாற்றினார்.

2. Titanic பேரிடருக்குக் காரணமான முடிவு

Titanic கப்பலின் வீழ்ச்சிக்குக் காரணம் ஒரு பெரிய பனிப்பாறை என்று நம் அனைவருக்கும் தெரியும்.

ஆனால் அந்த பனிப்பாறையைக் கப்பலின் உச்சியிலிருந்த கண்காணிப்பாளர் கவனிக்காததற்குக் காரணம் அவரிடம் தொலைநோக்கி இல்லாதது.

கப்பல் துறைமுகத்தைவிட்டு கிளம்புவதற்கு முன் கப்பலின் இரண்டாம் அதிகாரியை மாற்ற முடிவெடுக்கப்பட்டது.

அந்தக் குழப்பத்தில் தொலைநோக்கி இருந்த பெட்டகத்திற்கான சாவி முறையாகக் கைமாற்றப்படவில்லை.

அதனால் கண்காணிப்பாளர் தொலைநோக்கி இல்லாமல் பனிப்பாறையைக் கவனிக்க முடியவில்லை.

3. Calculus எனும் கணிதச் சூத்திரம் உலக மக்களை அடைய தாமதமானது

Calculus எனும் கணிதச் சூத்திரத்தால் உலகில் பல தொழில்நுட்ப வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன.

ஆனால், 13ஆம் நூற்றாண்டில் ஒரு துறவி தாள் இல்லை என்று தம் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த இன்னொரு தாளில் எழுதியிருந்ததை அழித்து விட்டார். அவ்வாறு நடந்திருக்காவிட்டால், Calculus முன்பே பயன்படுத்தப்பட்டிருக்கும்.

காரணம் அந்தத் தாளில் கிரேக்க கணித மேதை ஆர்க்கிமீடிஸின் (Archimedes) கணிதச் சூத்திரங்கள் குறித்து வைக்கப்பட்டிருந்தன.

Calculus பற்றிய அடிப்படை கணக்குகளையே அந்தத் துறவி அழித்திருக்கிறார்!

சர் ஐசெக் நியூட்டன், கோட்ஃப்ரைட் லேய்ப்னிஸ் (Sir Isaac Newton,Gottfried Leibni) இருவரும் Calculusஐக் கண்டுபிடித்த பல ஆண்டுகளுக்கு முன்பே அது மனிதர்களைச் சேர்ந்திருக்கக்கூடும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »