இலங்கை அரசின் 300 – க்கு மேற்பட்ட இணையத்தளங்கள் மீது தாக்குதல்! குழப்பத்தில் அரசு

மே 18 தமிழின அழிப்பு நாளான இன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் சிறிலங்கா துதூவராலயங்கள் இணையத்தளங்கள், சிறிலங்கா அரசநிர்வாக இணையங்கள் மற்றும் சிறிலங்கா அரச ஆதரவான செய்தி ஊடக இணையங்கள் உட்பட 300 -க்கும் மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்களை ஊடுருவி அந்த தளங்களில் முள்ளிவாய்க்கால் இன்படுகொலைப்படங்களை பதிவேற்றியும் அதை தாம் மறக்க மாட்டோம் எனவும் செய்தி பதிவேற்றியுள்ளனர்.

இது மட்டுமல்லாமல் யாழில் உள்ள இந்தியா துணைத்தூதராக இணையத்திற்குள்ளும் உள்ளடங்கும்.

அதுமட்டுமின்றி இதே மாதிரியாக 2017ம் ஆண்டு மே மாதம்18ம் திகதியும் 200க்கும் மேற்பட்ட இணையத்தளங்களை இதே பேரில் முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

அமேரிக்காவையே ஆட்டம்காணவைத்திக்கொண்டிருக்கும் சைபர் தாக்குதல் இப்பொழுது மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் என்கின்ற பெயரில் சிறிலங்கா அரசையும் கதிகலங்க வைத்திருப்பது முக்கியமான விடயமாகும்.

அது மட்டுமின்றி சிறிலங்கா துதூவராலய இணையங்களுக்குள் ஊடுருவப்பட்டிருப்பதால் பல்வேறுபட்ட ரகசியத்தகவல்களும் கசிந்திருக்ககூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »