கைரேகை ஸ்கேனர் வசதியுடன் கூடிய சாம்சங் மடிக்கணினி அறிமுகம்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் ’ Samsung Notebook Spin’, மொடல் தற்போது அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இம்மடிக்கணினி 256 ஜிபி எஸ்எஸ்டி டிரைவ் மற்றும் விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இதனை Login செய்ய விண்டோஸ் ஹெல்லோ மூலமாக கைரேகை ஸ்கேனர் வசதி இடம்பெற்றுள்ளது.

Samsung Notebook Spin, 13.3 அங்குல HD plus தொடுதிரை கொண்ட Display வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. ஆனால், Samsung Notebook Spin-7 18.5mm தடிமனுடன், 1.53 கிலோ எடையும் கொண்டுள்ளது.

இச்சாதனம், 360 டிகிரி கோணத்தில் வளையக்ககூடிய தொடுதிரை வசதியை கொண்டதாகும். மேலும், 8ஆம் தலைமுறை Intel core i5 Processor மற்றும் 8 ஜிபி நினைவகம் ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளது.

இம்மடிக்கணினியில், ’Active Pen Support’ வசதி இடம்பெற்றுள்ள போதிலும், இதற்கென தனியாக பணம் செலுத்த வேண்டும்.

இச்சாதனத்தில் ‘Studio plus’ எனும் வசதி இடம்பெற்றுள்ளதால், வாடிக்கையாளர்கள் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை கொண்டு மிக எளிமையாக திரைப்படங்களை உருவாக்க முடியும்.

USB Type-c, USB 3.0ஒ1, USB 2.0ஒ1இ, HDMI போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் Samsung Notebook Spin-யில் இடம்பெற்றுள்ளன.

தற்போது அமெரிக்காவில் மட்டும் விற்பனைக்கு வந்துள்ள இச்சாதனம், விரைவில் ஏனைய நாடுகளுக்கும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »