பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்தியாவில் களமிறங்கியது ஒன்பிளஸ் 6 : 21-ம் தேதி முதல் விற்பனை

மொபைல் போன் உலகில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக லண்டன் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 6 இன்று மும்பையில் நடைபெற்ற விழாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நமது நாட்டின் ஸ்மார்ட் போன் சந்தையில் ஒன்பிளஸ் போன்களுக்கென தனி இடம் உண்டு. அந்த வரிசையில் ஒன்பிளஸ் 6  ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஸ்மார்ட் மொபைல் பயனர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இன்று இந்தியாவில் இரு வகையான ஒன்பிளஸ் 6  ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடலும், 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் 6.29 இன்ச் ஆப்டிக் AMOLED நாட்ச் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX519 சென்சார், f/1.7 அப்ரேச்சர், 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376K சென்சார், f/1.7 அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் வழங்கப்பட்டு இருக்கும் கைரேகை சென்சார் வடிவம் மாற்றப்பட்டு 0.4 நொடிகளில் ஸ்மார்ட்போனை அன்லாக் செய்யும் பேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 16 எம்பி சோனி IMX371 சென்சார் மற்றும் முன்பக்கம் போர்டிரெயிட் மோட் வழங்கப்படும் என ஒன்பிளஸ் அறிவித்துள்ளது. புதிய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ஆக்சிஜன் ஓஎஸ் 5.1 கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் 6 போனின் சிறப்புகள்:

* 6.28 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 ரக AMOLED டிஸ்ப்ளே

* கார்னிங் கொரில்லா கிளாஸ் 5

* 2.8 ஜிகாஹர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்

* அட்ரினோ 630 GPU

* 6 ஜிபி / 8 ஜிபி ரேம்

* 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி இன்டெர்னல் மெமரி

* ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியா) மற்றும் ஆக்சிஜன் ஓஎஸ் 5.1

* டூயல் சிம் ஸ்லாட்

* 16 எம்பி + 20 எம்பி பிரைமரி கேமரா

* 16 எம்பி செல்ஃபி கேமரா

* கைரேகை சென்சார்

* வாட்டர் ரெசிஸ்டண்ட்

* 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட்

* 3300 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் டேஷ் சார்ஜ்

6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட ஒன்பிளஸ் 6 போனின் ரூ.34,999. 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் கொண்ட போன் விலை ரூ.39,999 எனவும் தெரிவி்கப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் புதிய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனினை மே 21-ம் முதலும், சாதாரண வாடிக்கையாளர்கள் மே 22-ம் தேதி முதலும் போனினை வாங்க விற்பனை துவங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »