கூகுள் ப்ளே ஸ்டோர் அப்ளிகேஷன்களின் APK பைலை டவுன்லோட் செய்வது எப்படி?

எமது ஆண்ட்ராய்டு போனுக்கு நாம் அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் (Install) செய்ய வேண்டும் எனின் நாம் முதலில் செல்வது கூகுள் ப்ளே ஸ்டோர் ஆகும்.

ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்களை கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் இலகுவாக டவுன்லோட் செய்து இன்ஸ்ட்டால் செய்துகொள்ள முடிந்தாலும்கூட சில சந்தர்பங்களில் கூகுள் ப்ளே ஸ்டோர் செயலி பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துவதுண்டு.

அவ்வாறான சந்தர்பங்களில் எமக்குத் தேவையான அப்ளிகேஷன்களின் APK பைலை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யலாம். அது மாத்திரமின்றி APK பைல் ஒன்றை பயன்படுத்தி அப்ளிகேஷன் ஒன்றை நிறுவுவதன் மூலம் மேலும் பல நன்மைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறான பல அனுகூலங்கள் பின்வருமாறு.

  • செயலிகளை டவுன்லோட் செய்வதற்கும் நிறுத்துவதற்கும் கூகுள் கணக்கு அவசியமில்லை.
  • உங்கள் நாட்டிற்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் வழங்கப்படாத செயலிகளையும் டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.
  • இணையம் இல்லாத சந்தர்ப்பங்களிலும் கூட APK ஒன்றை பயன்படுத்தி அப்ளிகேஷன்களை நிறுவிக்கொள்ளலாம்.
  • APK ஒன்றை பயன்படுத்தி அப்ளிகேஷன்களை நண்பர்கள் மத்தியில் பகிந்துகொள்ளலாம்.

மேற்குறிப்பிட்டவைகள் தவிர மேலும் பல வசதிகளும் உண்டு. இனி கூகுள் ப்ளே ஸ்டோர் அப்ளிகேஷன்களின் APK பைலை டவுன்லோட் செய்வது எப்படி? என்பதை நோக்குவோம்.

உங்களுக்குத் தேவையான ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்களின் APK பைலை டவுன்லோட் செய்வது மிகவும் இலகு. இதற்கென ஏராளாமான இணையதளங்கள் உண்டு. எனினும் எ பி கே பியோ எனும் இணையத்தளமானது APK கோப்புக்களை தரவிறக்க மிகவும் இலகுவானதும் பாதுகாப்பனதும் ஆகும்.

APK பியோ இணையத்தளம்:

APK பியோ இணையத்தளமானது கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கக் கூடிய அணைத்து அப்ளிகேஷன்களுக்குமான APK பைல்களை வழங்குவதுடன் கூகுள் ப்ளே ஸ்டோரில் பட்டியல் படுத்தப்படாத அப்ளிகேஷன்களையும் டவுன்லோட் செய்ய உதவுகிறது. மேலும் இந்த இணையத்தளதின் ஊடாக குறிப்பிட்ட ஒரு செயலியின் முன்னைய பதிப்புகளையும் டவுன்லோட் செய்து கொள்ள முடிகின்றமை இதன் விஷேட அம்சமாகும்.

APK பியோ இணையதளத்தை கணணி, மொபைல் போன் ஆகிய இரண்டு சாதனங்கள் மூலமும் அணுகலாம். உங்களுக்கு தேவையான செயலியின் APK பைலை இத்த தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனின் APK பியோ தளத்தில் வழங்கப்பட்டுள்ள Search bar மூலம் தேடிப்பெறலாம் பின்னர் Download APK எனும் பட்டனை அழுத்துவதன் மூலம் அவற்றை தரவிறக்கி கொள்ள முடியும்.

டவுன்லோட் செய்த APK பைலை எவ்வாறு நிறுவுவது என்பதை அறிய விரும்பினால் எமது முன்னைய பதிவை பார்க்க: APK பைல் ஒன்றை ஆண்ட்ராய்டு போனில் நிறுவுவது எப்படி?

APK பியோ இணையத்தளம் பயன்படுத்துவதற்கு இலகுவான இடைமுகத்தை கொண்டுள்தால் எமக்கு தேவையான செயலிகளை மிக இலகுவாக தேடிப்பெற முடிகிறது. நீங்களும் குறிபிட்ட இணையததளதிற்கு செல்ல விரும்பினால் இங்கே சுட்டுக.

குறிப்பு: பொதுவாக கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லாத மூன்றாம் நபர் இணைய தளங்களில் இருத்து டவுன்லோட் செய்யும் APK கோப்புகள் நம்பகத்தன்மை குறைந்தவைகள் ஆகும். எனினும் APK பியோ இணையதளத்தில் இருத்து டவுன்லோட் செய்யும் APK கோப்புகள் பற்றி அச்சம் கொள்ள வேண்டியதில்லை அவைகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருப்பதை போன்றே எவ்வித மாற்றங்களும் செய்யபடாமல் வழங்கபடுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »