சாம்சுங்கின் மடிக்கக்கூடிய கைப்பேசி எப்போது அறிமுகமாகும்? தகவல் வெளியானது

சாம்சுங் உட்பட மேலும் சில ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்கள் மடிக்கக்கூடிய கைப்பேசிகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தன.

இவற்றுள் முந்திக்கொண்டு வெற்றிகரமாக குறித்த கைப்பேசியினை சாம்சுங் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் ஏற்கணவெ வெளியாகியிருந்தன.

இந்நிலையில் இக் கைப்பேசிகள் இவ் வருடத்தின் டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என சாம்சுங் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் திரையானது 7.3 அங்குல அளவுடையதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் இக் கைப்பேசிகளின் ஏனைய சிறப்பம்சங்கள் மற்றும் விலை தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »