காற்று மாசடைதலை தடுக்க புதிய யுக்தி: விஞ்ஞானிகள் அசத்தல்

காற்றிலுள்ள மாசுக்கள் அல்லது வைரசுக்களை அகற்ற விஞ்ஞானிகள் புதிய வழிமுறை ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர்.

இதற்காக தேன்கூடு போன்ற வடிவத்தினைக் கொண்ட மீள்தன்மை உடையதும், முப்பரிமாண தோற்றம் உடையதுமான பொருளினை உருவாக்கியுள்ளனர்.

சவுதி அரேபியாவில் உள்ள விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்திற்கான King Abdullah பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுவினரே இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதனை உருவாக்குவதற்காக பொலிஸ்ரைரீன் போன்ற பதார்த்தங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இம் முறையின் ஊடாக செயற்கையான சிக்கல்தன்மை வாய்ந்த நுண்ணிய பொருட்களைக்கூட வடிகட்ட முடியும் என குறித்த விஞ்ஞானிகள் குழுவிற்கு தலைமை தாங்கிய Chisca என்பவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »