அற்புதமான அம்சங்களுடன் ரெலிகிராம் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு

ஒன்லைன் ஊடாக குறுஞ்செய்திகளை அனுப்புதல், சட் செய்தல் உட்பட குரல்வழி மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்வதற்கு ஏராளமான அப்பிளிக்கேஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இவற்றுள் குறிப்பிட்ட அளவு அப்பிளிக்கேஷன்கள் மாத்திரமே பிரபல்யம் வாய்ந்தவையாகும்.

ரெலிகிராம் எனப்படும் அப்பிளிக்கேஷனும் ஓரளவிற்கு பிரபல்யம் வாய்ந்ததாகும்.

iOS சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய இந்த அப்பிளிக்கேஷனில் ஏற்கணவே நான்கு வகையான கணக்குகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தக்கூடியதாகவும், ஒவ்வொரு கணக்கின்றகும் பிரத்தியேக வர்ணங்களை பயன்படுத்தக்கூடியதாகவும் இருந்தது.

இந்நிலையில் இவ்வாறான வசதி அன்ரோயிட் சாதனங்களுக்காகவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இவ் வசதியினைப் பெறுவதற்கு ரெலிகிராம் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பான 4.7 இனை தரவிறக்கம் செய்ய வேண்டும்.

தவிர வாட்ஸ் ஆப் போன்று உடனடியாக ரிப்ளை செய்யக்கூடிய வசதியும் iOS, Android சாதனங்களுக்கான ரெலிகிராம் அப்பிளிக்கேஷனில் தற்போது தரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »