Sharp நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

இலத்திரனியல் சாதன உற்பத்தியில் பெயர் பெற்று விளங்கும் Sharp நிறுவனம் ஸ்மார்ட் கைப்பேசிகளையும் வடிவமைத்து அறிமுகம் செய்கின்றது.

இந்நிலையில் தற்போது AQUOS R2 எனும் புத்தம் புதிய கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

இக் கைப்பேசியானது 6 அங்குல அளவு, 3040 x 1440 Pixel Resolution உடைய QHD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Snapdragon 845 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 64GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

மேலும் Android 8.0 Oreo இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருக்கும் குறித்த கைப்பேசியில் 16 மெகாபிக்சல்கள், 22 மெகாபிக்சல்கள் உடைய டுவல் பிரதான கமெரா, 16 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 3130 mAh மின்கலம் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »