ஈர கூந்தல் உதிர்வதை தடுப்பது எப்படி?

பெண்களின் அழகை மெருகேற்றிக் காட்டுவதே அவர்களின் கூந்தல் தான். அந்த கூந்தலை பராமரிப்பது என்பது ரொம்பவே கஷ்டமான விஷயம்.

அதிலும், பார்ட்டி கொண்டாட்டங்கள் என்று வெளியே கிளம்பும்போது, அவசர அவசரமாக தலைக்குக் குளித்து, அதைக் காயவைத்து ஹேர் ஸ்டைல் செய்து கொண்டு கிளம்புவதுக்குள், அவர்களும் ஒரு வழியாகியாகி விடுவார்கள், கூட இருக்கும் நம்மையும் ஒருவழியாக்கி விடுவார்கள்.

இதுபோன்று அவசரமாகக் கிளம்பும்போது, எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்பதை பற்றி மறந்தே போய்விடுவார்கள். நாம் எப்படியாவது கிளம்பினால் போதும் என்று நினைத்து செய்யும் தவறால் தலை முடி அதிகளவில் உதிரும்.

இதுபோன்ற கஷ்டமான நேரத்தில் செய்யும் தவறில் இருந்து, நம் தலைமுடியை எப்படி காப்பது? நாம் சில வழிமுறைகளை கடைபிடித்தாலே போதும் தலைமுடி சேதமடைவதிலிருந்து காப்பாற்ற முடியும்.

குளித்து முடித்த பின்பு தலை முடியைப் பற்றிய கவலைபடாமல். குளிக்கும் போதே கவனம் செலுத்தினால் போதும்.

* குளித்து முடித்தபின் ஸ்டைலிங் சீரம் பயன்படுத்த மறக்காதீர்கள். இதன் மூலம் தலைமுடி சிக்கல் விழாமல் தடுக்கப்படும்.

* தலையைத் துவட்டும் போது, டவலால் அழுத்தித் துவட்டக்கூடாது. ஈரமான கூந்தலை அழுத்தித் துவட்டும் போது, முடி எளிதில் உதிர்ந்துவிடும்.

* முடிந்த அளவு ஹேர் டிரையர் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை கைவிரல்களால் கோதிவிட்டு, காற்றில் உலர விடவேண்டும்.

* அடுத்து நீங்கள் முக்கியமாக செய்ய வேண்டியது, ஈர முடியைச் சீப்பால் சீவவே கூடாது. அப்படி சீவும் போது முடி உதிர்வது அதிகமாகும்.

இந்த முறைகளை பயன்படுத்தினாலே போதும் ஈர முடி உதிர்வதை இலகுவாக தடுத்து விடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »