சத்து நிறைந்த பீட்ரூட் – பூண்டு சாலட் செய் முறை..!

சத்துநிறைந்த பீட்ரூட்டை தினமும் குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் நல்லது. இன்று பீட்ரூட் வைத்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு சத்து நிறைந்த பீட்ரூட் – பூண்டு சாலட்
தேவையான பொருட்கள்

பீட்ரூட் – 400 கிராம்
ஆலிவ் ஆயில் – 2 டீஸ்பூன்
வினிகர் – 3/4 டீஸ்பூன்
பூண்டு பல் – 2
ஸ்பிரிங் ஆனியன் – 2
உப்பு – தேவையான அளவு

செய்முறை

ஸ்பிரிங் ஆனியன், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பீட்ரூட்டை தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு 25 முதல் 30 நிமிடம் வரை வேக விடவும்.

வெந்தவுடன் பீட்ரூட்டை தனியாக எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஆலிவ் ஆயில், வினிகர், பொடியாக நறுக்கிய பூண்டு, ஸ்பிரிங் ஆனியன், உப்பு முதலியவற்றை ஒரு பாட்டிலில் போட்டு நன்கு குலுக்கி, வேக வைத்து நறுக்கி வைத்துள்ள பீட்ரூட்டில் ஊற்றி நன்கு கிளறி பரிமாறவும்.

சூப்பரான பீட்ரூட் – பூண்டு சாலட் ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »