வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய அமேஷானின் நடவடிக்கை

உலகின் முன்னணி ஒன்லைன் வியாபாரத் தளமாக விளங்கும் அமேஷான் அதிரடி மாற்றம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது.

அதாவது ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கான கட்டணத்தை எதிர்பாராத விதமாக உயர்த்தியுள்ளது.

வழமையாக ப்ரைம் வாடிக்கையாளர்கள் வருடத்திற்கான கட்டணமாக 99 டொலர்களை செலுத்த வேண்டும்.

ஆனால் புதிய நடைமுறையின் அடிப்படையில் 20 சதவீத கட்டணம் அதிகமாக செலுத்த வேண்டும்.

இதன்படி 119 டொலர்கள் வருடம் தோறும் செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது.

எனினும் அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மாத்திரமே தற்போது இந்த கட்டண அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜுன் மாதம் 16ம் திகதி முதல் இப் புதிய கட்டண முறைமை அமுலுக்கு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »