`மொபைல் போனை குழந்தைகள் மறக்க ஒரேவழி இதுதான்!’- தீர்வு சொல்லும் மருத்துவர்

அதீத மொபைல் உபயோகம், கட்டுப்பாடுகளற்று டிஜிட்டல் திரையைப் பார்ப்பது போன்றவை பார்வைக் குறைபாடு தொடங்கி பலவகையான உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும். உடலுறுப்பு சார்ந்த வளர்ச்சி, பேச்சுத்திறன், பார்வைத்திறன் போன்றவை முழுமைபெற்ற பெரியவர்களுக்கே டிஜிட்டல் திரைகள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. எனில், குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம்

‘தொடர்ச்சியாக டிஜிட்டல் திரைகளைப் பார்த்தால், குழந்தைகளுக்கு என்ன மாதிரியான உடல்நல பாதிப்புகள் ஏற்படும்’ என்பது குறித்து விரிவாகப் பேசுகிறார், குழந்தைகள் நல மருத்துவர் ஜெ.ஷியாமளா.

பிறந்த குழந்தைக்கு டிஜிட்டல் திரைகளைக் காண்பித்து வந்தால், குழந்தையின் உடல் வளர்ச்சிகள் யாவும் தடைப்படவும், தாமதப்படவும் வாய்ப்பு உண்டு.

“குழந்தைகளைப் பொறுத்தவரையில், பிறந்து நான்கு மாதங்கள் கடந்தபிறகு, அவர்களுக்கு கேட்கும் திறன், பேசும் திறன் போன்றவை வளர்ச்சிபெறத் தொடங்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு டிஜிட்டல் திரைகளைக் காண்பித்துவந்தால், அந்த வளர்ச்சிகள் தடைப்படவும், தாமதப்படவும் வாய்ப்பிருக்கிறது. அப்படியான குழந்தைகள், வளர வளர நடத்தை தொடர்பான மாற்றங்களை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகளும் அதிகம். ஆட்டிஸமே இல்லாமல், அதற்கான அறிகுறிகள் மட்டும் ஏற்படும் வாய்ப்பு அதிகம். உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *