தவறுதலாக வழங்கப்பட்ட வாட்ஸ்அப் அம்சம்

“Reply Privately” எனும் வசதியை தவறுதலாக விண்டோஸ் பீட்டா செயலியில் வாட்ஸ் அப் வழங்கியுள்ளது.

அதாவது குரூப் சாட்களின் போது மற்றவருக்கு தெரியாமல் ஒருவருக்கு மட்டுமே பதில் அனுப்ப முடியும்,

வாட்ஸ்அப் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த அம்சம் தற்சமயம் சோதனை செய்யப்படுகிறது.

பிரைவேட் ரிப்ளை அம்சம் வாட்ஸ்அப் பீட்டா செயலியில் காணப்பட்டு அதன்பின் நீக்கப்பட்டு விட்டது.

டெவலப்பர்கள் சார்பில் இந்த அம்சம் தவறுதலாக இயக்கப்பட்டு விட்டதாக @WABetaInfo சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த அம்சம் 2.17.348 பதிப்பில் வழங்கப்பட்டது, மற்ற அம்சங்கள் 2.17.336 மற்றும் 2.17.346 விண்டோஸ் பீட்டா செயலியில் காணப்பட்டுள்ளது.

இதில் அழைப்புகளை மேற்கொள்ள புதிய வடிவமைப்பு (UI) வழங்கப்பட்டுள்ளது.

வீடியோ கால் மேற்கொள்ள குவிக் ஸ்விட்ச் வழங்கப்பட்டுள்ளதால், வாய்ஸ் கால்களை ஒற்றை கிளிக் மூலம் வீடியோ காலாக மாற்ற முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »