இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள், வீடியோக்களை பகிருவதில் புதிய மாற்றம்

அன்ரோயிட் சாதனங்களுக்கான இன்ஸ்டாகிராம் அப்பிளிக்கேஷனில் புதிய மாற்றம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி ஸ்டோரி ஒன்றினை போஸ்ட் செய்யும்போது ஒன்றிற்கு மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் ஒரே தடவையில் இணைத்து பகிர்ந்துகொள்ள முடியும்.

இதுவரை காலமும் ஒரு புகைப்படம் அல்லது ஒரு வீடியோவினை மாத்திரமே ஒரு ஸ்டோரியில் பகிர்ந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.

இந்த தகவலை இன்ஸ்டாகிராம் நிறுவனமே உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

எனினும் ஒரே தடவையில் தரவேற்றம் செய்யக்கூடிய புகைப்படம் மற்றும் வீடியோக்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 10 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

iOS சாதனங்களுக்கான இன்ஸ்டாகிராம் அப்பிளிக்கேஷனில் இவ் வசதி அடுத்து வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »