புத்தம் புதிய வசதியை தரும் Samsung Pay

தனது உற்பத்திகளை பயனர்கள் இலகுவாக ஒன்லைனில் கொள்வனவு செய்வதற்கு சாம்சுங் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட வசதியே Samsung Pay ஆகும்.

இவ் வசதியானது பல நாடுகளில் கிடைக்கப்பெறுகின்றது.

இவ்வாறான நிலையில் பயனர்களின் நன்மை கருதி மற்றுமொரு புதிய வசதியினை Samsung Pay வசதியினுள் அந்நிறுவனம் உள்ளடக்குகின்றது.

இதன்படி ஒன்லைன் ஊடாக பணப்பரிமாற்ற சேவையைப் பெற்றுக்கொள்ளக்கூடிய பேபாலினை Samsung Pay வசதியுடன் இணைத்துப் பயன்படுத்த முடியும்.

இவ் வசதி நேற்றைய தினம் முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பயன்படுத்துவதனால் பயனர்கள் தமது வங்கிக் கணக்குகள் தொடர்பான பாதுகாப்பினை அதிகரித்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »