டிசம்பர் 31லிருந்து சில மொடல் போன்களில் வாட்ஸ் அப் கிடையாது!

புத்தாண்டு முதல் குறிப்பிட்ட சில மொடல் செல்போன்களில் வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியாது என அந்த நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பிரபல மெசேஜிங் செயலியான வாட்ஸ் ஆப் நிறுவனம் 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அந்நிறுவனம் தொடங்கப்பட்ட காலங்களில் விற்பனையான செல்போன்களில் 70 சதவீதம் செல்போன்கள் நோக்கியா மற்றும் பிளாக்பெர்ரி அளித்த இயங்குதளங்களாகும்.

ஆனால் தற்போது மக்கள் உபயோகிக்கும் இயங்குதளங்களில் 99.5 சதவிகிதம் கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியவை வழங்கிய இயங்குதளமாகும்.

ஆகையால் குறிப்பிட்ட சில பழைய மொடல் செல்போன்களில் இயங்கி வந்த வாட்ஸ் ஆப் செயலி, இனி இயங்காது என தெரியவந்துள்ளது.

மேலும் அந்த மொடல் செல்போன்களை குறிப்பிட்டு அதற்கான கால அட்டவணையும் வாட்ஸ் ஆப் வெளியிட்டிருந்தது.

இயங்குதளம் கால அட்டவணை
நோக்கிய சிம்பியன் எஸ்60 ஜூன் 30, 2017
பிளாக்பெர்ரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10 டிசம்பர் 31, 2017
விண்டோஸ் போன் 8.0 மற்றும் அதற்கு முந்தையவை டிசம்பர் 31, 2017
நோக்கிய எஸ்40 டிசம்பர் 31, 2018
ஆண்ட்ராய்ட் பதிப்புகள் 2.3.7 மற்றும் அதற்கு முந்தையவை பிப்ரவரி 1, 2020

இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள செல்போன்களில் வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல 2020 பிப்ரவரி 1-ம் திகதிக்கு பின் ஆன்ட்ராய்ட் 2.3.7 மற்றும் அதற்கு முந்தைய மொடல்களிலும் வாட்ஸ் அப் சேவை நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »