மூன்று ஸ்மார்ட்போன்களை வெளியிடும் திட்டத்தில் கூகுள்

இந்தாண்டு 3 புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிடும் திட்டத்தில் கூகுள் நிறுவனம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூகுள் நிறுவனம் தொடக்கத்தில் நெக்சஸ் பிராண்டு ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வந்தது. ஆனால், கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனம் தனது வழக்கத்தை மாற்றிக் கொண்டது. அதாவது, நெக்சஸ் பிராண்டு ஸ்மார்ட்போன்களுக்கு மாற்றாக பிக்சல் ஸ்மார்ட்போன்களை கூகுள் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

அந்த வகையில் புதிய மிட்-ரேஞ்ச் பிக்சல் ஸ்மார்ட்போன்களை கூகுள் நிறுவனம் இந்தாண்டு அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்தாண்டு மூன்று புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்யவிருப்பதாக சீனாவைச் சேர்ந்த வலைத்தளம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய புதிய ஸ்மார்ட்போன்கள் ‘டிசையர்’ என்ற குறியீட்டு பெயர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும், கூகுள் அறிமுகம் செய்யவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள் ஆன்ட்ராய்டு கோ இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »