ஸ்மார்ட்போனில் உளவு பார்க்கும் ஆப்: இது உங்க ரகசியத்தை வெளிவிடலாம்

தள்ளுபடி விலையில் கிடைக்கும் சிலவகை ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் போது மிகுந்த கவனம் வேண்டும்.

அவற்றில் உள்ள கேமரா வசதி, ஆப், போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களை கவனித்து அவைகளின் பயன்பாடுகளை அறிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும்.

ஏனெனில் சில ஸ்மார்ட்போன்களில் ஸ்பை(spy app) எனும் நம்மை உளவு பார்க்கும் ஆப் இருக்கலாம். இந்த ஸ்பை ஆப்பை பொறுத்தவரை சில ஸ்மார்ட்போன்களில் Global Positioning System(GPS) போன்று செயல்படுகிறது.

இது உங்களின் மொபைலில் இருக்கும் பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் போன்ற அனைத்தையும் பதிவு செய்யும் திறமையை கொண்டுள்ளது.

அதனால் உங்களின் ஸ்மார்ட்போனில் தேவையற்ற மென்பொருளை தவிர்த்து, மென்பொருள் விற்பனையாளரிடமிருந்து வழங்கப்பட்ட சட்டபூர்வமான ஆப் பயன்பாடுகளை ஸ்மார்ட்போனில் பயன்படுத்தலாம்.

ஆனால் கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் சில ஆப் பயன்படுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. இதனால் உங்களுடைய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவராமல் தடுக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »