பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் மண்டையோட்டு வடிவான விண்கலம்

மனித மண்டையோட்டினை ஒத்த வடிவத்தினை உடைய இராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ் விண்கல் 2018ம் ஆண்டில் பூமியைக் கடந்து செல்லும்.

எனினும் இதனை பூமியிலுள்ளவர்கள் பார்க்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர் இதேபோன்ற விண்கல் 2015ம் ஆண்டில் தென்பட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் அப்போது குறித்த விண்கல்லிற்கு Halloween Asteroid எனப் பெயரிட்டுள்ளனர்.

நிலவின் ஒழுக்கிலிருந்து சுமார் 486,000 கிலோ மீற்றர்கள் அப்பால் இவ் விண்கல் அசைந்துகொண்டிருக்கின்றதென விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இது 625 மீற்றர்கள் தொடக்கம் 700 மீற்றர்கள் வரையான பருமனைக் கொண்டிருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »