12 லட்சம் டிவிட்டர் கணக்குகள் முடக்கம்? காரணம் இதுதான்!

தீவிரவாதத்திற்கு ஆதரவளிக்கும் கருத்துக்கள் பதிவிட்ட 12 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்குகளை டிவிட்டர் நிறுவனம் தற்போது முடக்கியுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு முதல் தீவிரவாதத்திற்கு ஆதரவளிக்கும் கருத்துத் தெரிவிப்பவர்களின் கணக்குகளை டிவிட்டர் நிறுவனம் முடக்கி வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை 2,74,460 கணக்குகளை டிவிட்டர் முடக்கியுள்ளது. முந்தைய புள்ளி விவரங்களை ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 8.4 சதவீதமாக குறைந்துள்ளது.

டிவிட்டர் வெளியிட்ட விவரத்தில் 2015 ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் 2017 இடையே சுமார் 1,210,357 கணக்குகளை டிவிட்டர் நிறுவனம் முடக்கி வைத்துள்ளது. இந்நிலையில் வன்முறையைத் தூண்டும் விதமாக கருத்துக்களை வெளிட்டதால் இந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »