ஃபிளிப்கார்ட் இணையதளத்தை வாங்கப் போகிறதா அமேசான்?

ஃபிளிப்கார்ட் இணையதளத்தை அமேசான் நிறுவனம் வாங்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் முன்னணியில் இருப்பவை அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் ஆகியவை ஆகும். இரு நிறுவனங்களுக்கும் இடையே கடும் வியாபார போட்டி நிலவி வந்தது. இதனால், இவ்விரு நிறுவனங்களும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை அளித்து வந்தன. கடந்த சில வருடங்களாக ஃபிளிப்கார்ட் இணையதளம் நஷ்டத்தில் இயங்குவதாக தகவல் பரவியது.

இதனையடுத்து, அமெரிக்காவை சேர்ந்த வால்மார்ட் மற்றும் கூகுள் நிறுவனங்கள் ஃபிளிப்கார்ட் தளத்தின் 40 சதவீத பங்குகளை வாங்குவதற்கு தீவிரம் காட்டி வந்தன. இதன் மதிப்பு சுமார் 200 பில்லியன் டாலர்கள் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் தகவல் வெளியிட்டிருந்தது. வால்மார்ட் மற்றும் கூகுள் நிறுவனங்களைத் தொடர்ந்து, ஃபிளிப்கார்ட் இணையதளத்தின் இந்தியப் பங்குகளை வாங்க அமேசான் நிறுவனமும் முனைப்பு காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »