இணையதளங்களை வேவு பார்க்கும் பேஸ்புக்: தொடரும் சர்ச்சை

சமீபத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த க்ளிக்ஸ் ( Cliqz) என்ற நிறுவனம் இணையத்தளங்கள் தொடர்பில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இதில் உலக அளவில் 30% இணையதளங்களைப் பற்றியும் அவற்றைப் பார்வையிடுபவர்கள் பற்றியும் பேஸ்புக் நிறுவனம் வேவு பார்க்கிறது என்று தெரியவந்துள்ளது.

#DeleteFacebook என்ற பெயரில் பேஸ்புக் தகவல் திருட்டுக்கு எதிரான முயற்சி பரவி வரும் நிலையில், அதிர்ச்சி அளிக்கும் தகவலை ஒன்றையும் இந்த ஆய்வு தந்துள்ளது. பேஸ்புக் அக்கவுண்ட்டை டெலிட் செய்துவிட்டாலும் அந்த அக்கவுண்ட்டை வைத்திருந்தவரையும் அவர் பயன்படுத்தும் இணையதளங்களையும் பேஸ்புக் ரகசியமாக வேவுபார்க்க முடியும்.

கூகுள் நிறுவனம் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களில் 64% பேரை பின்தொடர்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. விளம்பரங்களை தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் Ad Blocker இணைப்புகளும் பாதுகாப்பானவை அல்ல என்றும் அவையும் பயன்படுத்துபவரின் இன்டர்நெட் பயன்பாடு குறித்த தகவல்களைத் திருடுகின்றன என்றும் இந்த ஆய்வு எச்சரிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »