அங்கவீனர்களுக்காக கூகுள் மேப்பில் தரப்பட்டுள்ள புதிய வசதி பற்றி தெரியுமா?

உலகின் முக்கியமான பகுதிகளை மாத்திரமின்றி அவற்றிற்கு பயணிக்கக்கூடிய பாதைகளையும் காட்டும் வசதியைக் கொண்டுள்ள அப்பிளிக்கேஷனே கூகுள் மேப் ஆகும்.

இந்த அப்பிளிக்கேஷனில் குறித்த ஒரு இடத்திற்கு புகையிரதம் மூலம், கார் மூலம் மற்றும் நடந்து செல்வதற்கான பாதை வழிகாட்டல்களும் அதற்கு எடுக்கும் நேரமும் காட்டப்படும்.

இப்படிப்பட்ட வசதிகளைக் கொண்ட கூகுள் மேப்பில் மற்றுமொரு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது அங்கவீனமுற்ற நிலையில் சர்க்கர நாற்காலி போன்றவற்றினைப் பயன்படுத்துபவர்கள் பயணிக்கக்கூடிய பாதைகளை சுட்டிக்காட்டக்கூடிய வசதி உள்ளடக்கப்பட்டுள்ளது.

இவ் வசதியில் தற்போது உலகின் முக்கியமான நகரங்கள் மாத்திரம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதன்படி London, New York City, Tokyo, Mexico City, Boston மற்றும் Sydney ஆகிய நகரங்களில் சர்க்கர நாற்காலிகள் மூலம் பயணிக்கக்கூடிய பாதைகளை அறிந்துகொள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »