கூகுள் மேப்ஸ் செயலியில் பேருந்து விவரங்களை வழங்கும் புதிய அப்டேட்

கூகுள் நிறுவனம் தனது மேப்ஸ் சேவையில் புதிய அம்சங்களை அவ்வப்போது சேர்த்து வருகிறது. முன்னதாக ஏ.ஆர். நேவிகேஷன், ஸ்பீட் லிமிட்கள், ஸ்பீட் டிராப் போன்ற வசதிகளை கூகுள் தனது மேப்ஸ் சேவையில் சேர்த்தது.
அந்த வரிசையில் தற்சமயம் பேருந்து, நேரலை போக்குவரத்து மற்றும் இந்திய ரயில்வேயின் ரெயில் நேரங்கள் மற்றும் பல்வேறு போக்குவரத்து விவரங்களை வழங்கும் வசதிகளை மேப்ஸ் சேவையில் கூகுள் வழங்கி இருக்கிறது.
நேரலை போக்குவரத்து சார்ந்த பேருந்து விவரங்கள்
அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்படும் பேருந்து சார்ந்த விவரங்களை நேரடி போக்குவரத்து சார்ந்து வழங்குகிறது. இதை கொண்டு பயனர்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே சிறப்பாக திட்டமிட முடியும். இந்த அம்சம் ஒரு இடத்தில் இருந்து பயனர் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல எத்தனை மணி நேரம் ஆகும் என்பதை துல்லியமாக காண்பிக்கிறது.
புதிய அம்சத்தை இயக்க பயனர்கள் தங்களது கூகுள் மேப்ஸ் செயலியில் பயணிக்க வேண்டிய இடத்தை குறிப்பிட்டு பின் டிரான்சிட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் பேருந்து மற்றும் நேரலை போக்குவரத்து நெரிசல் விவரங்களை மேப்ஸ் செயலி வழங்கும்.
முதற்கட்டமாக இந்த வசதி சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு, மைசூர், ஐதராபாத், மும்பை, பூனே, லக்னோ, டெல்லி மற்றும் சூரத் போன்ற நகரங்களில் வழங்கப்படுகிறது.
நேரலை ரெயில் விவரங்கள்
இந்திய ரெயில்வேயின் ரெயில் விவரங்களை வழங்க ஏற்கனவே பல்வேறு செயலிகள் கிடைக்கின்றன. அந்த வகையில் கூகுள் நிறுவனம் வேர் இஸ் மை டிரெயின் எனும் செயலியுடன் இணைந்து கூகுள் மேப்ஸ் செயலியில் ரெயில் நேரங்களை நேரலையில் துல்லியமாக வழங்குகிறது.
இந்த அம்சத்தை பயன்படுத்த பயனர்கள் பயணிக்க வேண்டிய இடத்தை குறிப்பிட்டு தேட வேண்டும். பின் ரெயில் விவரங்கள் பட்டியலிடப்படும். இதில் தாமதமாகி இருக்கும் ரெயில் விவரங்களையும் கூகுள் மேப்ஸ் வழங்குகிறது.
பல்வித போக்குவரத்து பரிந்துரைகள்
கூகுள் மேப்ஸ் பொது போக்குவரத்து அம்சம் பல்வேறு போக்குவரத்துகளை பட்டியலிடும். இதில் பொது போக்குவரத்து மற்றும் ஆட்டோ ரிக்‌ஷா போன்றவற்றை பரிந்துரைக்கும். புதிய அம்சம் பயனர்கள் பயணிக்க பல்வேறு வழிகளில் விரும்பியவற்றை தேர்வு செய்யும் வசதியை வழங்குகிறது. இந்த அம்சம் முதற்கட்டமாக பெங்களூரு மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற பகுதிகளுக்கும் வழங்கப்படும் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *