70 நாட்களுக்கு Unlimited Calls; வோடபோனின் ₹299 திட்டத்தில்…!

70 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகள் மேற்கொள்ளும் வகையில் ₹299-க்கு அதிரடி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது வோடபோன்!

70 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகள் மேற்கொள்ளும் வகையில் ₹299-க்கு அதிரடி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது வோடபோன்!

தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள அவ்வப்போது டெலிகாம் நிறுவனங்கள் அதிரடி சலுகளைகளையும், சிறப்பு திட்டங்களையும் அறிமுகம் செய்வது வழக்கமாகி வருகிறது. அந்தவகையில் தற்போது வோடாப்போன் நிறுவனம் ₹299-க்கு சிறப்பு திட்டம் ஒன்றினை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் 70 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ளலாம் (உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் அடங்கும்). எனினும் இந்த 70 நாட்களுக்கும் சேர்த்து 4G/3G டேட்டா வெறும் 3GB மட்டும் அளிக்கப்படுகிறது. மேலும் 1000 குறுஞ்செய்திகளும் அளிக்கப்படுகிறது.

இந்த திட்டம் தற்போதைக்கு மும்பை, குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மட்டும் அறிமுகமாகியுள்ளது. விரைவில் வோடாப்போன் சேவை அளிக்கும் அனைத்து மாநிலங்களிலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

வரம்பற்ற டேட்டாவிற்காகவும், வோடாபோன் நிறுவனம் சமீபத்தில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 229 ரூபாய் மதிப்பு கொண்ட இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இந்த வேலிடிட்டி நாட்கள் முழுவதும் அளவற்ற தொலைப்பேசி அழைப்புகளை தரவுள்ள இந்த திட்டத்தில், நாள் ஒன்றிற்கு 2GB டேட்டா மற்றும் 100 மெசேஜ்கள் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *