மாஸ் காட்டும் ஐ.ஒ.எஸ். 13 – அதிரடி அம்சங்களுடன் அறிவிப்பு

அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் நடைபெற்ற 2019 ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் ஐபோன் மற்றும் ஐபாட் சாதனங்களுக்கான புதிய ஐ.ஒ.எஸ். இயங்குதளம் அறிமுகம் செய்யப்பட்டது.
ஐ.ஒ.எஸ். 13 தளத்தில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டார்க் மோட், புத்தம் புதிய ஆப்பிள் மேப்ஸ் அனுபவம், மேம்பட்ட போட்டோஸ் செயலி மற்றும் பல்வேறு புதிய வசதிகள் மற்றும் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதற்கான பீட்டா பதிப்புகள் இம்மாத இறுதியில் வழங்கப்படுகிறது.
டார்க் மோட் வசதியில் சிஸ்டம்வைடு டார்க் கலர் ஸ்கீம் செய்யப்பட்டுள்ளது. இது அனைத்து செயலிகளிலும் சீராக வேலை செய்யும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இதனை டெவலப்பர்களு்ம தங்களது செயலிகளில் ஒருங்கிணைத்துக் கொள்ளும் வசதியை ஆப்பிள்  வழங்குகிறது.
ஐ.ஒ.எஸ். 13 தளத்தின் போட்டோஸ் செயலியில் புதிய வசதிகள் சேர்க்கப்படுகின்றன. அந்த வகையில் புதிய இயங்குதளத்தில் ஆன்-டிவைஸ் மெஷின் லெர்னிங் தொழில்நுட்பம் மூலம் புகைப்படங்கள் வரிசைப்படுத்தப்படுகின்றன. இது மெஷின் லெர்னிங் தொழில்நுட்பம் மூலம் அனைத்து புகைப்படங்களையும் சீராக வரிசைப்படுத்துவதோடு, சிறப்பாக இருக்கும் புகைப்படங்களை அடையாளப்படுத்திக் காண்பிக்கும்.
புகைப்படங்களை எடிட் செய்யும் வசதியும் புதிய ஐ.ஒ.எஸ். 13 இயங்குதளத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜெஸ்ட்யூர் மூலம் புகைப்படங்களை எளிமையாக எடிட் செய்யலாம். இத்துடன் வீடியோக்களை ரொட்டேட் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது.
செயலிகள் மற்றும் வலைதளங்களில் சைன்-இன் செய்யும் வழிமுறையை பாதுகாப்பானதாக மாற்ற ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் ஐ.டி. சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதை கொண்டு பயனர்கள் வெவ்வேறு செயலிகள் மற்றும் வலைதளங்களில் சைன்-இன் செய்ய முடியும்.
ஆப்பிள் ஐ.டி. மூலம் ஆப்பிள் நிறுவனம் பயனர்களின் விவரங்களை சாதனத்திலேயே பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும். ஆப்பிள் ஐ.டி. சேவை இல்லாதபட்சத்தில், ஐ.ஒ.எஸ். 13 பயனர்கள் தங்களுக்கான பிரத்யேக ஐ.டி.யை உருவாக்கிக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. ஆப்பிள் ஐ.டி. ஆத்தென்டிகேஷன் விவரங்களை கொண்டு பயனர் ப்ரோஃபைல்களை உருவாக்க மாட்டோம் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.
புதிய ஐ.ஒ.எஸ். இயங்குதளத்தில் ஆப்பிள் மேப்ஸ் சேவையும் மாற்றப்பட்டுள்ளது. புதிய ஆப்பிள் மேப்ஸ் சேவையில் அதிகளவு பகுதிகள், முகவரிகள் முன்பை விட சரியாக வழங்கும் படி மாற்றப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்டிரீட் வியூ சேவை அதிக ரெசல்யூஷனில் 3டி தரத்தில் வழங்கப்படுகிறது. புதிய மேப்ஸ் செயலி அமெரிக்காவில் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் வழங்கப்படுகிறது. மற்ற நாடுகளில் அடுத்த ஆண்டு முதல் வழங்கப்பட இருக்கிறது.
ஐ.ஒ.எஸ். 13 இயங்குதளத்தில் மேம்பட்ட ரிமைண்டர்ஸ் அம்சம், மெசேஜஸ் செயலியில் புதிய வசதிகள், சிரி ஷார்ட்கட்கள், மேம்பட்ட கார்பிளே, ஐ.ஒ.எஸ். சாதனங்களை குரல் மூலம் இயக்கும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. நோட்ஸ், ஃபைல்ஸ், ஹெல்த் ஆப் உள்ளிட்டவற்றுக்கும் புதிய அம்சங்கள் வழங்கப்படுகின்றன. ஐபோன் 6எஸ் மற்றும் அதன் பின் வெளியான சாதனங்களில் ஐ.ஒ.எஸ். 13 விரைவில் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *