எதிர்காலம் உனக்காக

எதிர்காலம் உனக்காக !!

எழுதிடுங்கள் தேர்வுதனைச் சிறப்பாக
—— எத்திக்கும் உங்கள்பேர் சொல்லிடவே
பழுதில்லை எழுதுங்கள் படித்தவற்றைப்
—— பலர்போற்றும் வகைநிற்க உழைப்பீரே !

வழுவில்லை மதிப்பெண்ணும் வாங்கிடவே
——- வரிசையாக பதில்களையும் தந்திடுங்கள்
முழுமையாக மனமொத்துப் படித்திடுங்கள்
—— முத்தான எதிர்காலம் வந்துசேரும் !!!

ஊக்கமாக சென்றிடுங்கள் தேர்விற்கே
—— உலகாளும் நிலைபெறவே அமைதியுடன்
ஆக்கமாக எழுதுகின்ற விடைகள்தான்
——- அறிவாற்றல் சோதிக்கும் வினாக்கள்தான் !!

தாக்கங்கள் அனைத்துமே தேர்வைநோக்கத்
——– தடையில்லா வாழ்வதுவும் கிட்டிடுமே !
சீக்கிரமே நேரத்திற்குள் முடியுங்கள்
——– சிந்தையிலே இக்கருத்தை வைப்பீரே !!

வான்வெளியும் கண்டிடலாம் மாணவரே
—— வகையான எதிர்காலம் உமக்காக .
கான்வெளியும் ஆராய்ந்து தேர்ந்திடலாம்
——- காலத்தால் பருவமழை பெய்திடவே !!

மான்போன்றே துள்ளிடவும் வேண்டுமன்றோ
——- மங்காத எதிர்காலம் நோக்கியுமே
தேன்போன்றே வாழ்க்கையுமே தித்திக்கும்
——- தெவிட்டாத வல்லுனர்கள் உருவாக !!!

ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »