மாடிதான் கொண்டோம் மாறவில்லை எமது தொழில் 👴🍚

கண்டம் தாண்டிச் சென்ற பின்பும் ..
காணி மண் இல்லை எனினும்
கஷ்டங்கள் கசந்த போதும் 
கண்டு விட்டான் ஒரு முறையை

மாடி வீட்டு விவசாயம் அது
மாட்டுச்சாணியே பசளை அங்கு …
பூச்சிகளின் பங்கத்திற்கும் இவை
பூச்சி கொல்லி அறியவில்லை ….

உழுதுண்டு வாழ்ந்தவன்
உயிர்வரை களைத்த போதும் ….
உணவு போட மறந்திடான் –
உயிருள்ள விவசாயி அவன்…

உணவு மருந்தான காலம் கடந்து…
மருந்தே உணவான
காலம் இன்றெனினும் …
உயிருள்ள சில முதிய இதயங்கள் ,
முற்றிப் பழுத்த பின்பும் துடிக்கிறது…
இந்த இயற்கை முறையினால் தான்….

விதைகள் என்றும் உறங்குவதில்லை….
மண்ணில் மட்டுமல்ல
மாடியிலும் தான்…….

-தீபா-

உறங்காத கனவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *