நம் மூளையிலிருந்து பாஸ்வேடு திருடும் ஹேக்கர்கள்!

உலகம் முழுவதும் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில் ஹேக்கர்களால் நம் மூளையிலிருந்து நமக்குத் தெரியாமல் பாஸ்வேடு முதலிய விவரங்களைத் திருட முடியும் என்ற அதிர்ச்சிகரத் தகவல் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

Wannacry, Petya போன்ற பணம் பறிக்கும் ரேன்சம்வேர் வைரஸ் மென் பொருட்கள் உலகம் முழுவதும் பல நாடுகளில் லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்களை முடக்கியுள்ளது.

இச்சூழலில் மேலும் அச்சுறுத்தும் விதமாக ஹேக்கர்களால் நம் மூளையிலிருந்து நமக்குத் தெரியாமல் பாஸ்வேடு முதலிய விவரங்களைத் திருட முடியும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்திருக்கிறது.

அமெரிக்காவின் பிர்மிங்ஹாமில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வின் முடிவில் இதனைத் தெரிவித்துள்ளனர். ரோபாடிக் விளையாட்டு பொம்மைகள் மற்றும் வீடியோ கேம்களை மூளையால் கட்டுப்படுத்தும் விதமாக உருவாக்கப்படும் எலெக்ட்ரோஎன்செஃபலோகிராப் (இ.இ.ஜி.) ஹெட்செட் மூலம் இது சாத்தியம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இ.இ.ஜி. ஹெட்செட் அணிந்தபடி வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருக்கும் ஒருவர் அந்த ஹெட்செட்டை அணிந்தபடியே வங்கி இணையதளத்தில் லாக்-இன் (Log in) செய்தால், சில வைரஸ் மென்பொருட்களின் உதவியுடன் அவரது மூளையில் இருந்து பாஸ்வேடு போன்ற முக்கிய தகவல்களை திருட முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »