வாட்ஸ்அப் அப்டேட்: குரூப்பில் கூட தனியாக அரட்டை அடிக்கலாம்

வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் உள்ள குரூப் சேட்டிங்கிலும் தனியாக ஒரு நபரிடம் மட்டும் பேசும் வசதி கிடைக்க உள்ளது.

வாட்ஸ்அப் மொபைல் அப்ளிகேஷன் பல்வேறு புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. இந்த வகையில் குரூப் சேட்டில் ஒரு நபருக்கு மட்டும் தெரியும் வகையில் மெசேஜ் அனுப்ப உதவும் Reply Privately என்ற புதிய வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.

இதே போல PIP (Picture in Picture) என்ற வசதியும் கிடைக்க உள்ளது. இதன் படி வாட்ஸ்அப்பில் ஏதேனும் வீடியோ பார்த்துக்கொண்டிருக்கும் சமயத்திலேயே மெசேஜ் மூலமும் அரட்டை அடிக்கலாம்.

இந்த வசதி பீட்டா பயனாளர்கள் சிலருக்கு மட்டும் தற்போது கிடைக்கிறது. விரைவில் அனைவரது பயன்பாட்டுக்கும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »