பூமி காணப்படும் பால்வீதியில் மேலும் 2 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு

எமது பூமி காணப்படுகின்ற பால்வீதியில் புதிதாக இரண்டு கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவற்றினை போலந்து நாட்டைச் சேர்ந்த வானியல் ஆராய்ச்சியாளர்களே கண்டுபிடித்துள்ளனர்.

எனினும் இவ்விரு கிரகங்களும் ஏனைய கிரகங்களைப் போன்று கிரகங்களுக்கான அனைத்து இயல்புகளையும் கொண்டிருக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இக் கிரகங்களை கண்டுபிடிப்பதற்காக Gravitational Microlensing எனும் தொழில்நுட்பத்தினை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

இவற்றுள் ஒரு கிரகம் வியாழன் கிரகத்தினை விடவும் 2 தொடக்கம் 20 மடங்கு வரை அதிகமான திணிவைக் கொண்டிருக்கலாம் எனவும், மற்றைய கிரகம் பூமியைப் போன்று 2.3 தொடக்கம் 23 மடங்கு வரையான திணிவைக் கொண்டிருக்கலாம் எனவும் அவர்கள் நம்புகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »