டீன் ஏஜ்ஜை கடந்து 20-வது வயதில் காலடி எடுத்து வைத்த Google…!

கூகுள் தனது 20 பிறந்த தினத்தை வீடியோ மூலம் வெளியிட்டு கொண்டாடி வருகிறது….!

இன்றைய இளைய தலைமுறைகளின் ஹீரோவாக எத்தனை பிரபலங்களாக இருந்தாலும் அதை அவர்கள் வருடங்களுக்கு ஒருமுறை மாற்றுவது வழக்கம். ஆனால், ஒன்றை மட்டும் மாற்றாமல் வாழ்க்கை முழுக்க வைத்திருப்பது ஒன்றுதான் “Google”. உண்மைதானே..! எனக்கு தெரியாது என்ற வார்த்தையை தற்போதைய கால கட்டத்தில் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. ஏனென்றால், எனக்கு ஒரு விஷயம் தெரியவில்லை என்றால் நான் அதை Google-லின் உதயுடன் கற்றுக்கொள்வேம்.

ஏனென்றால், அந்த அளவுக்கு Google நமது வாழகியோடு ஒன்றிப் போய் இருக்கிறது. எந்த மொழியில், எந்தக் கேள்வி கேட்டாலும் அடுத்த நொடி அதை நமக்கு கற்றுத தரும் கூகுள், இன்று, ‘நானும் 90’ஸ் கிட்தான்டா’ என்பதை நினைவுபடுத்திக்கொண்டே டீன் ஏஜ்ஜை கடந்து 20-வது வயதில் காலடி எடுத்து வைக்கிறது. 1998, செப்டம்பர் 4 ஆம் தேதி இந்நிறுவனம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், செப்டம்பர்  27 ஆம் தேதியைத் தான் பிறந்தநாளாக கொண்டாடுகிறது கூகுள்.

முதன் முதலில், 1998 ஆம் ஆண்டு கூகுள் ஹோம் பேஜ்ஜில் ‘பர்னிங் மேன்’ டூடுல் வைக்கப்பட்டது. கூகுளின் நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இருவரும் நொவாடா பாலைவனத்தில் நடைபெறும் ‘பர்னிங் மேன் பெஸ்டிவல்’ என்ற திருவிழாவில் கலந்து கொள்ள விரும்பினார்கள். அந்த நேரத்தில் கூகுளின் சர்வர் கிராஷ் ஆகிவிட்டால், தாங்கள் அலுவலகத்தில் இல்லை, சர்வர்கள் கிராஷ் ஆனாலும் இப்போது சரி செய்ய இயலாது என்பதைக்  கூகுள் வாடிக்கையாளர்களுக்கு எப்படித் தெரிவிப்பது என்று யோசித்தனர்.

அந்த யோசனையின் பலனாக வந்ததுதான் இந்த ‘பர்னிங் மேன்’ டூடுல். பர்னிங் மேன் லோகோவை  கூகுள் லோகோவில் உள்ள இரண்டாவது ‘O’ விற்குப் பின்னால் குறியீடாக வைத்து முதல் டூடுலை வடிவமைத்தனர். வாடிக்கையாளர்களும் இந்தக் குறியீட்டை புரிந்துகொண்டனர்.  அதன்பிறகு பல்வேறு டூடுல்களை உருவாக்கியது கூகுள் நிறுவனம்.

தற்போது பப்ஜி போன்ற வீடியோ கேம்களை விளையாடிக் கொண்டிருக்கும் 90-ஸ் கிட்ஸ்க்கு விதை போட்ட வீடியோ கேம்களில் முக்கியமான ஒன்று பேக்மேன் கேம். மே 21, 2010 ஆம் ஆண்டு பேக்மேன் கேமின் 30-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் இந்த டூடுல் அமைக்கப்பட்டது.  ‘க்ளிக் டு ப்ளே’ என்ற வாசகத்தோடு இடம்பெற்ற இந்த டூடுலுக்கு மிகப்பெரிய வரவேற்பை மக்கள் வெளிப்படுத்தினர்.

கடந்த 20 வருடங்களில் 2000 டூடுல்களுக்கு மேல் கூகுளின் ஹோம் பேஜ்ஜில் இடம்பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »