அமெரிக்க பொலிசாரின் நிம்மதியை கலைத்த ஆப்பிளின் மொபைல் சாதனங்கள்

திருத்துவதற்காகவும், மீள்புதுப்பித்தலுக்கு உள்ளாக்குவதற்காகவும் வழங்கப்பட்ட ஆப்பிளின் மொபைல் சாதனங்கள் அமெரிக்க பொலிசாரின் நிம்மதியை தொலைத்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கலிபோர்னியாவில் ஈல்க் க்ரோவ் பகுதியில் ஆப்பிளின் மொபைல் சாதன பழுதுபார்க்கும் நிலையம் ஒன்று உள்ளது.

இங்கு ஏராளமான ஐபோன்கள் மற்றும் ஐபேட்கள் என்பன பழுதுபார்ப்பதற்காகவும், மீள்புதுப்பித்தலுக்காகவும் வாடிக்கையாளர்களால் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த மொபைல் சாதனங்களில் இருந்து தானாகவே 911 என்ற பொலிசாரின் அவசர அழைப்பு இலக்கத்திற்கு அழைப்புக்களை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த நான்கு மாத காலத்தில் சுமார் 1,600 தடவைகள் இவ்வாறு அழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனினும் இது எவ்வாறு நிகழ்ந்தது என்பதற்கான காரணத்தை இதுவரை எவரும் கண்டுபிடிக்கவில்லை.

தவறுதலாக நிகழ்ந்த போதிலும் அதற்கான சாத்தியங்கள் தொடர்பில் ஆப்பிள் நிறுவனம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »