அட்டகாசமான IPHONEஐ வெளியிடவுள்ள APPLE நிறுவனம்..!!

உலக மக்களை தன் பக்கம் ஈர்த்துள்ள Apple நிறுவனம் நடத்தவிருக்கும் நிகழ்ச்சியில் புதிய iPhone ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கலிபோர்னியாவில் செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி இந்த நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.

இந்த வருடம் Apple நிறுவனம் 3 புதிய ஸ்மார்ட் போன்களை வெளியிடும் என்று துறைசார் வல்லுநர்கள் நம்புகின்றனர்.

Image result for new iphone launch in september 2018

இதற்கு முன்னர் வெளியாகிய ஸ்மார்ட் போன் ரகங்களை ஒப்பிடும் போது புதிதாக வெளியாகவுள்ள ஸ்மார்ட்போன் பெரியதாக இருக்கும் என கூறப்படுகின்றது.

iPhone X ஸ்மார்ட்போன் போன்றே இன்னொரு கைபேசியை வெளியிடவும் திட்டமிட்டுள்ளது.

எனினும் அதற்குக் குறைந்த விலையிலான LCD screen தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது.

Related image

அடுத்து நடைபெறவிருக்கும் வெளியீட்டு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழுக்கமைய தங்க நிறம் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய புதிய ஸ்மார்ட் போன் தங்க நிறத்திலானது என்ற சந்தேகம் ஒன்று எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »