முகப்பருவை வந்த தெரியாமல் போக்க கற்றாழை போதும்..!!

ஆணாக இருந்தாலும், பெண்ணாக முகப்பருக்கள் வந்து மறைந்தால் சிக்கல் தான்.

முகப்பரு மறைந்தாலும், அது வந்ததற்கான தடம் அப்படியே இருக்கும்.

முகப்பரு வந்து நீங்கிய இடத்தில் உள்ள பாதிப்படைந்த இறந்த செல்களை நீக்க வேண்டும்.

நீக்கினால்தான் தோலில் உயிரணுக்கள் புதிதாக உருவாகும்.

எனினும் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு முகப்பருவை நீக்குவது, எப்படி என அறிந்து கொள்வோம்.

முகப்பரு வராமல் எப்படித் தடுப்பது?
முகப்பருவினால் ஏற்பட்ட தழும்புகளை போக்குவது எப்படி?

Image result for aloe vera for face

 • கற்றாழையில் அதிகமாக கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளது.
 • கற்றாழையில் தோலுக்குத் அவசியமான சத்துக்கள் நிறைந்துள்ளன.
 • கற்றாழையில் உள்ள என்சைம் தோலுக்கு நெகிழ்வுத் தன்மையை கொடுக்கும்.
 • பாக்டீரியா, பங்கஸ், அழுக்கு போன்றவற்றை நீக்கும்.
 • கற்றாழை தோலை சுத்தப்படுத்தும்.
 • கற்றாழை முகத்தில் தோன்றும் வெள்ளைத் தன்மையை போக்கும்.
 • சருமத்தை சமநிலையில் வைத்துக்கொள்ள உதசும்.
 • முகப்பருவால் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கும்.

Image result for aloe vera for face

கற்றாழையை எப்படி பயன்படுத்துவது?
Image result for aloe vera for face

 • சோற்றுக் கற்றாழையின் மேலிருக்கும் தோலை நீக்க வேண்டும். அதன் உள்ளே இருக்கும் ஜெல்லை தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
 • அதனுடன் மஞ்சள் தூளை ஒரு டீஸ்பூன் அளவு சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். முகப்பரு இருக்கும் இடத்தில் இந்த ஜெல்லை தடவ வேண்டும்.
 • தடவி இருபது நிமிடம் கழித்து முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். மூன்று நாளைக்கு ஒரு முறை இதை தொடர்ந்து செய்ய வேண்டும். அப்படி செய்தால் உடலின் சூட்டைத் தணிக்கும். முகப்பரு வருவதை கட்டுப்படுத்தும்.
  அத்துடன் பரு வந்ததற்கான தடம் நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »