இன்றைய கூகுள் டூடுல்: சுதந்திர தினத்தை சிறப்பித்த கூகுள்!!

இந்தியாவின் 72வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்திய சுதந்திர தினம் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும். அந்த வகையில் விடுமுறை தினங்கள், உலக நிகழ்வுகள், சாதனை செய்த மனிதர்களை கொண்டாடும் விதமாக் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் கூகுள் டூடுலில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

அந்த டூடுலில் நமது நாட்டின் தேசிய விலங்கான புலி, யானை, தேசிய பறவையான மயில்கள், பின்னணியில் சூரிய உதயமும், அழகான மலர்கள் மலர்வதும் குறித்த ஓவியம் இடம் பெற்றுள்ளது. கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த டூடுல் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

இந்த ஓவியமானது இந்தியாவில் ஓடும் லாரிகளில் மேல் கண்ணிற்கு தெரியும் விதமாக வரையப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »