22 நாளில் 1 மில்லியன்; விற்பனையில் சாதனை படைத்த OnePlus 6!

OnePlus நிறுவனத்தின் OnePlus 6 மொபைல் ஆனது வெளியான 22 தினங்களில் 1 மில்லியன் மொபைல்கள் விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

தன் கேமிராக்களால் தனிப் பெருமையுடன் வெளிவரும் OnePlus நிறுவனத்தின் OnePlus 6 மொபைல் ஆனது வெளியான 22 தினங்களில் உலகளவில் 1 மில்லியன் மொபைல்கள் விற்றுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பெட்டே லூவு தெரிவித்துள்ளார்.

இந்த OnePlus 6  மொபைல் ஆனது இந்தியா உள்பட 35 நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்ட குறிகுய தினத்தில் தற்போது இந்த விற்பனை சாதனையினை புரிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விற்பனையில் இந்தியாவின் பங்கு அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

OnePlus 6 ஆனது இரண்டு வகைகளில் வெளியிடப்பட்டது. அதன்படி…

  • 6GB + 64 GB  நினைவகத்துடன் வெளிவரும் OnePlus 6 ஆனது Rs 34,999  எனவும்,
  • 8GB + 128 GB  நினைவகத்துடன் வெளிவரும் OnePlus 6 ஆனது Rs 39,999 எனவும்,

மேலும், இந்த மொபைலின் சந்தைக்கு முந்தைய விற்பனையானது நியார்க், லண்டன், பேரிஸ், மில்லன் மற்றும் பெல்ஜியங்கில் நடைப்பெற்றது. இதனையடுத்து இந்தியாவில் மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெற்றது.

OnePlus 6 சிறப்பம்சங்கள்…

  • Dual Sim, VoLTE, 4G, 3G, Wi-Fi, NFC
  • Octa Core, 2.45 GHz Processor
  • 6 GB RAM, 64 GB inbuilt
  • 3300 mAh Battery
  • 6.01 inches, 1080 x 2160 px display
  • 16 MP Dual Rear + 16 MP Front Camera
  • Android, v7.1.1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »