60 வருடங்களின் பின்னர் முதல் முறையே மலேரியா மாத்திரைக்கு அனுமதி…!!

மலேரிய நோயினை எதிர்த்து போராடும் மாத்திரைக்கு 60 வருடங்களின் பின்னர் முதல் முறையாக அமெரக்க அதிகாரிகளினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 8.5 மில்லியன் மக்கள் மலேரியாவினால் பாதிக்கப்படுகின்றனர். இந்த மருந்து பொதுவாக மலேரியாவில் இருந்து விடுதலை பெற உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது.

Image result for First malaria drug in 60 years given approval

மலேரியாவில் பல வகைகள் உள்ளது. அவை சில நேரங்களில் கல்லீரலில் செயலற்ற நிலையை ஏற்படுத்தும். அத்துடன் சிலருக்கு அதில் இருந்து மீண்டு வருவது சவாலாக இருக்கும்.

மலேரியாவில் இருந்து விடுபட உதவும் tafenoquine என்ற மாத்திரை தனி சிறப்பு வாய்ந்ததென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உலகெங்கிலும் உள்ள கட்டுப்பாட்டு அமைப்புகள் தற்போது இருந்த மருந்தை பரிந்துரைக்க முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த நோயினால் அதிகமாக சிறுவர்கயே பாதிக்கின்றனர். மலேரியா நுளம்பு ஒரு முறை கடித்தாலும், பாடசாலை மாணவர்கள் தீவிர பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.

Image result for First malaria drug in 60 years given approval

நோய்த்தொற்றுடைய நபர்களுக்கு நோய்க்கான அறிகுறிகள் இல்லாத நிலையில் காணப்படலாம். ஏனென்றால் நுளம்புகள் ஒருவரின் உடலில் இருந்து மற்றொருவரின் உடலுக்கு சென்று கடிக்கின்றது.

இந்த அச்சுறுத்தலை உலகம் முழுவதும் அகற்றுவது கடினமான விடயமாகும்.

இப்போது அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA), tafenoquine என்ற மருந்துக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. கல்லீரலை பாதுகாத்து மீண்டும் இந்த தொற்று பரவுவதனை தடுக்கின்றது.

Image result for First malaria drug in 60 years given approval

உடனடியாகஇற்த தொற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக மற்றொரு மருந்துடன் சேர்ந்து இந்த மருந்து எடுக்கப்படலாம்.

மலேரியாவிடம் இருந்து கல்லீரலிலை பாதுகாப்பதற்கு ஏற்கனவே பயன்பாட்டில் சில மருந்துகள் உண்டு.

Image result for tafenoquine

ஆனால் இந்த tafenoquine மாத்திரையை 14 நாட்களுக்க எடுத்தால் போதுமானதாக இருக்கும் என கூறப்படுகின்றது.

ஆனால் இந்த மாத்திரை ஒரு சில நாட்களிலேயே நல்ல பலனை கொடுப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மருந்து பயனுள்ளதென அமெரிக்க அனுமதியளித்துள்ளது. எனினும் இதன் அதிக பயன்பாடு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் எனவும் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »