நினைவாற்றலை மேம்படுத்த இதனை பினபற்றினால் போதும்..!

நம் வாழ்வில் சில நேரங்களில், நாம் அனைத்து பொருட்களையும், ஒரு இடத்தில் வைத்து விட்டு கண்டுபிடிக்க முழு வீட்டினையும் தேட வேண்டியிருக்கும்.

ஒரு பொருளை எங்காவது மறந்து வைத்து விடுவோம். பிறந்த நாள் அல்லது முக்கிய நினைவு நாட்களை மறந்து விடுவதனை வழக்கமாக கொண்டுள்ளோம்.

Image result for how to improve your memory

இவ்வாறான விடயங்களில் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், நினைவாற்றாலை வளர்த்து கொள்வதற்கு சில ஆலோசனைகளை இங்கு பெற்று கொள்ள முடியும்.

இந்த நிலைமையில் பாதிக்கப்பட்டவர்கள், இவை அனைத்து பொதுவான சம்பவங்களில் இடம்பெறுகின்றவைகள் என புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு வயதும் ஒரு காரணமாகும்.

ஆனால் வயதானது உங்கள் நினைவாற்றலை பாதிக்கக்கூடிய ஒரே காரணி அல்ல என்பதனையும் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.

Image result for improve memory

மன அழுத்தம் மற்றும் கவலை, எளிதாக நம்மை திசை திருப்பிவிடும் அல்லது நாம் என்ன செய்கின்றோம் என்பது குறித்து அவதானம் செலுத்தவில்லை என்றால் அது நமது நினைவகத்தை பாதித்துவிடும்.

ஆரோக்கியமான உணவு டயட் ஒன்றை பின்பற்றாமல், இருந்தாலும் இந்த பாதிப்பு ஏற்படும். துரித உணவுகளை ஒதுக்கி விட்டு மரக்கறி மற்றும் பழங்கள் அதிகம் எடுத்து கொண்டால் நினைவாற்றலை மேம்படுத்தி கொள்ள முடியும்.

Related image

உங்கள் நினைவகம் நன்றாக வேலை செய்ய, சத்துள்ள உணவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு சீரான உணவு முறையை பின்பற்ற வேண்டும்.

5 பழ துண்டுகள் மற்றும் காய்கறிகள் உள்ளடங்களாக மீன், தானியங்கள், பீன்ஸ்,மற்றும் முழு தானியங்களை உணவாக எடுத்து கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் பரிந்துறை செய்கின்றனர்.

இந்த வழியில் நாம் நமது மூளை, உடல், மற்றும் நரம்பு அமைப்புகள் ஒழுங்காக வேலை செய்ய தேவையான ஊட்டச்சத்து அனைத்தும் பெறுகிறோம் என்பதை உறுதி செய்ய முடியும்.

Image result for improve memory

ஊட்டச்சத்து மூளை ஆரோக்கியத்துடன் தொடர்புடையது, ஆனால் மற்ற தசைகளைப் போலவே, மூளைக்கு பயிற்சி வேண்டும்.

உங்கள் மூளைக்கு சவால் கொடுக்க சில பயிற்சிகள் உள்ளன. அவற்றினை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.

விளையாட்டுகள் மற்றும் பயிற்சிகள் மூலம் நினைவாற்றலை மேம்படுத்துவது எப்படி?

1. குறுக்கெழுத்து புதிர்கள் மற்றும் சுடோக்கு போன்றவைகளை விளையாடுகள்

Image result for Do crossword puzzles and Sudoku.
2. ஷாப்பிங் லிஸ்ட் அல்லது, படத்திலோ அல்லது புத்தகத்திலுள்ள எழுத்துக்களையோ நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
3. நினைவூட்டல் சாதனங்களைப் பயன்படுத்துதல் அல்லது கருத்துகளை தொடர்புபடுத்துதல், விடயங்களை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

Image result for how to improve your memory
4. புதிய வழியில் வேலைக்கு செல்லுங்கள்.
5. புதிய மொழியை கற்றுகொள்ளுங்கள்.
6. ரைம்ஸ் படியுங்கள், சிக்கலான ஒன்றை மனப்பாடம் செய்ய இது உதவும்.

Related image
7. இதுவரை அறியாத புதிய இடம் ஒன்றிற்கு செல்லுங்கள்.
8. செய்தித்தாளின் வேறு வித்தியாசமான பகுதியைப் படியுங்கள்.
9. இசை கருவிகளை வாசிக்க கற்றுகொள்ளுங்கள்.

Image result for Learn to play a musical instrument.
10. நினைவில் வைக்க வேண்டியவற்றை எழுதுங்கள், தகவலைத் தக்கவைத்துக்கொள்வது எளிதாக இருக்கும்.
11. சாப்பிட அல்லது எழுத பயன்படுத்தாத கையை பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.

Image result for Learn a new word everyday.
12. மன பயிற்சிகள் செய்யுங்கள், செஸ் போன்றவற்றை விளையாடுங்கள்.
13. தினமும் ஒரு புதிய வார்த்தையை கற்றுகொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »