சியோமி Mi மேக்ஸ் 3 சிறப்பம்சங்கள் வெளியானது

சியோமி நிறுவனத்தின் Mi மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் சீனாவில் ஜூலை 19-ம் தேதி அறிமுகமாக இருக்கிறது. வெளியீட்டுக்கு முன் சியோமி இணை நிறுவனர் மற்றும் தலைவர் பின் லின் ஸ்மார்ட்போனின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார்.
இன்று சியோமி நிறுவனம் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை வெளியிட்டிருக்கிறது. இவை ஏற்கனவே வெளியான தகவல்களை உறுதி செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் 206 சீன்களை டிடெக்ட் செய்யும் அம்சம், செயற்கை நுண்ணறிவு வாய்ஸ் அசிஸ்டன்ட், ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.
சியோமி Mi மேக்ஸ் 3 சிறப்பம்சங்கள்:
– 6.99 இன்ச் 2160×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி+ 18:9 IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm சிப்செட்
– அட்ரினோ 509 GPU
– 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX363 சென்சார், 1.4µm பிக்சல், டூயல் PD ஃபோக்கஸ், எல்இடி ஃபிளாஷ்
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
– 8 எம்பி செல்ஃபிகேமரா, எல்இடி ஃபிளாஷ்
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 5500 எம்ஏஹெச் பேட்டரி
– க்விக் சார்ஜ் 3.0
சியோமி Mi மேக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் விலை சீனாவில் 1_99 யுவான் முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 810 சிப்செட் கொண்ட வெர்ஷனும் அறிமுகமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதுகுறித்து சியோமி எவ்வித தகவலும் வழங்கவில்லை. #Xiaomi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »