இந்தியாவில் 5G சேவையை துவங்கவுள்ளது BSNL!

பிரபல டெலிகாம் நிறுவனமான BSNL விரைவில் தனது 5G சேவையினை நாடுமுழுவதும் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!

உலகின் பல்வேறு நாடுகளில் 5G ஆரம்பிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் BSNL நிறுவனம் முதல் முறையாக 5G சேவையினை வழக்க காந்திருக்கின்றது.

இதுகுறித்து BSNL தலைமை மேளாலர் அனில் ஜெயின் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்… ‘இதற்கு முன்னதாக நாட்டில் யாரும் 5G சேவையினை அறிமுகம் செய்யவில்லை என என்னால் உறுதியாக கூற இயலும்’ என தெரிவித்துள்ளார்.

இந்த சேவையினை துவங்கவதற்கான சரியான காலக்கெடுவினை எங்களால் கூற இயலாது. வரும் 2020-ஆம் ஆண்டிற்குள் இச்சேவையினை அறிமுகம் செய்யும் முனைப்பில் நிறுவனம் உள்ளது. எனினும் 2019-ஆம் ஆண்டின் முடிவிற்குள் இச்சேவை அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

4G சேவை அறிமுகத்தினை BSNL தவறவிட்டுவிட்டது, ஆனால் 5G சேவை அறிமுகத்தினை தவறவிடுவதாய் இல்லை. இந்த சேவையினை உலகளவில் அறிமுகம் செய்ய நோக்கியா, NTT அட்வான்ஸ் டெக்னாலஜி போன்ற பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

5G சேவையுடன் இதர பல சேவைகள் அறிமுகம் செய்தல் குறித்தும் இந்த நிறுவனங்களிடம் இருந்து வந்துள்ளது. இந்த பயன்பாடுகள் குறித்தும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் இந்த கூடுதல் சேவைகளும் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்த அவர், இதற்கு முன்னதாக BSNL பிராட்பேண்ட் மற்றும் லேண்ட் லைன் சேவைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய திட்டங்கள் குறித்தும் விளக்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »