பேஸ்புக் PASSWORDகளை திருடும் கும்பல்! இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

இலங்கையில் பேஸ்புக் மற்றும் மின்னஞ்சல் பயன்படுத்துபவர்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் மற்றும் மின்னஞ்சல் ஊடாக வரும் லிங்க் ஒன்றின் மூலம் பேஸ்புக் Password திருடப்படுகின்றது. இந்த நாட்களில் இந்த நடவடிக்கை வேகமாக இடம்பெற்று வருகின்றது.

இந்த ஆபத்து குறித்து தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கை கணினி அவசர சேவை சபை இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

இந்த லிங்க்கை திறப்பதன் மூலம் மீண்டும் Password கோரப்படுகின்றது. இவ்வாறான நிலையில் புதிய Password பதிவு செய்யும் போது, அந்த Password மர்ம கும்பல்களால் திருடப்படுகின்றது.

எனிவே இவ்வாறு லிங்க்களை திறக்க வேண்டாம் எனவும் அவற்றினை தவிர்க்குமாறும் பொது மக்களிடம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »