கூந்தலை உதிரவைக்கும் பொடுகை இப்படி செய்தால் முற்றாக போக்கலாம்!

கூந்தல் உதிர்வு என்பது தவிர்க்க முடியாத ஒரு விடயமாகியுள்ளது. இதற்கு பிரதான காரணமாக இருப்பது பொடுகு தான் என்பது பலருக்கு தெரியாது

பலருக்கு பொடுகு அதிமாகும் போது தலையில் ஒரு விதமான அரிப்பை ஏற்படுத்துகின்றது. எனினும் இயற்கையான முறையில் இதில் இருந்து இலகுவாக விடுப்பட முடியும்.

பொடுகை போக்கும் இயற்கையான பொருட்கள் என்ன?

வெந்தயம்
பாசிப்பயறு
கற்றாழை
வேப்பிலை
மருதாணி
தேங்காய் பால்
முட்டை

இந்த இயற்கையான பொருட்களை பொடுகை போக்குவதற்கு போதுமானதாக உள்ளது.

இயற்கையான பொருட்களை பயன்படுத்துவது எப்படி?

வெந்தயம் உஷணத்தை குறைக்கும் ஒரு பொருளாகும். இது பொடுகை தீர்க்க மிகவும் உதவியாக உள்ளது. வெந்தையத்தில் மிளகு தூள் மற்றும் பால் சேர்த்து தலையில் தேய்க்க வேண்டும். இது தலையில் நன்கு உறிய பின்னர் தலை குளிக்க வேண்டும். அத்துடன் தேங்காய் எண்ணெயுடன், வெந்தயத்தை காய்த்து தலையில் தேய்க்க வேண்டும்.

Image result for வெந்தயம்

பாசிப்பயறை மாவு போன்றாக்கி, தயிருடன் சேர்த்து தலையில் தேய்த்து ஊற வைக்க வேண்டும். பின்னர் குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பொடுகு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

Related image

கற்றாழை பொடுகு தொல்லையில் இருந்து விடுபட சிறந்த பொருளாகும். கற்றாழை சாற்றினை தலையில் தேய்த்து குளித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Image result for aloe vera

அத்துடன் தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து ஊற வைக்க வேண்டும். சில நிமிடங்களின் பின்னர் ஷாம்போ அல்லது சீயக்காய் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்குவதனை அவதானிக்கலாம்.

வேப்பிலை அரைத்து தலையில் தேய்த்து குளிக்க வேண்டும். இதனால் பொடுகு தொல்லையில் இருந்து விடுப்பட முடியும்.

Image result for வேப்பிலை

துளசியையும் அவ்வாறு அரைத்து பூசி குளித்து வரலாம். கறிவேப்பிலை அரைத்து, எலுமிச்சப்பழச்சாறு கலந்து தேய்த்து குளித்து வர வேண்டும்.

வாரத்திற்கு ஒரு முறை மருதாணி பயன்படுத்தலாம். அதனுடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து தலையில் பூசி குளித்து வர வேண்டும்.

Image result for மருதாணி

வெந்தயப்பொடியுடன், நெல்லிக்காய் தூள் சிறிதளவு மற்றும் தயிர், கடலைமாவு சேர்த்து தேய்க்க வேண்டும். வாரம் ஒரு முறை இவற்றினை பயன்படுத்தி வர வேண்டும்.

தேங்காய் அரைத்து அதன் பாலை தலையில் பூச வேண்டும். பின்னர் மிதமான நீரில் முடியை கழுவினால் பொடுகு குறைய வேண்டும்.

Related image

சாதம் வடித்த தண்ணீரை பயன்படுத்தினால் சிறந்த தீர்வு பெறலாம். முதல் நாள் வடித்த சாத தண்ணீரை தரையில் தேய்த்து குளிக்கலாம்.

முட்டையின் வெள்ளை கருவுடன், தயிர் மற்றும் எலுமிச்சை பழத்தின் சாறு சேர்த்து தலையில் தேய்த்து குளித்தால் இந்த தொல்லையில் இருந்து விடுப்படலாம்.

Related image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »