வெள்ளையாகுவதற்கு கிரீம் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு!

பெண்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆண்கள் வெள்ளையாகுவதற்காக பயன்படுத்தும் கிரீம் தொடர்பில் எச்சரிக்கை தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சிறிது காலங்களில் வெள்ளையாகுவதற்காக பயன்படுத்தப்படும் Whitening Cream தொடர்பில் இலங்கை நுகர்வோர் விவகாரங்கள் ஆணையம் பல சர்ச்சைக்குரிய தகவல்களை கண்டுபிடித்துள்ளது.

Image result for cream

அண்மையில் நுகர்வோர் விவகாரங்கள் ஆணையத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்ட 3 வகையாக கிரீம் தொகை கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தினால் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது.

அவ்வாறு ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட கிரீம் தொடர்பில் அறிக்கை ஒன்றும் பெற்று கொள்ளப்பட்டுள்ளது. பெற்று கொள்ளப்பட்ட அறிக்கைக்கமைய, கிரீம் ஒன்றில் உள்ளடங்கப்பட வேண்டிய பாதரசத்தின் அளவு SLS (743:2014) தரம் 1.0 mg/kg ஆக காணப்பட வேண்டும். எனினும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கிரீம்களில் அதன் அளவு அதிகமாக உள்ளதென உறுதியாகியுள்ளது.

Image result for cream

ஆய்வு அறிக்கைக்கமைய உறுதியான பாதரசத்தின் அளவு பின்வருமாறு,

Malika Beauty Cream 51752.

Golden Life Beauty Cream With Papaya and Aloevera 20292.

Nuha White Beauty Cream 20466.

Related image

இவ்வளவு அதிகமாக பாதரசத்தினை கொண்ட கிரீம்களின் பயன்பாடு பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த கிரீம்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றத்தினால் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே இவ்வாறான கீரிம்கள் பயன்படுத்துபவர்கள் அதனை உடனடியாக நிறுத்தி கொள்ளுமாறும், அவதானமாக இருக்குமாறும் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »